Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 27…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 27

கிரிகோரியன் ஆண்டு : 361_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 362_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 4 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்: 

36 – பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான்.

537 – துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.

1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது.

1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

1836 – இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் உயிரிழந்தனர்.

1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.

1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. 

1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.

1915 – யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் “நகுலேசுவரா நூல்நிலையம்” கீரிமலையில் திறக்கப்பட்டது.

1918 – செருமனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

1922 – உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சப்பானின் ஓஷோ சேவைக்கு விடப்பட்டது.

1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் 7.8 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,700 பேர் உயிரிழந்தனர்.

1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.

1949 – இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.

1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1966 – உலகின் மிகப் பெரும் குகை மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.

1978 – எசுப்பானியா 40 ஆண்டுகால பாசிச சர்வாதிகார ஆட்சியின் பின்னர் சனநாயக நாடானது.

1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

1985 – உரோம், வியன்னா விமான நிலையங்களில் பாலத்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – உருமேனியப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1996 – தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

1997 – வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2000 – யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2002 – செச்சினியாவின் குரோசுனி நகரில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.

2004 – எஸ்ஜிஆர் 1806-20 என்ற காந்த விண்மீனில் நிகழ்ந்த வெடிப்பினால் அதன் கதிர்வீச்சு புவியை அடைந்தது.

2007 – பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

2008 – இசுரேல் காசா மீது மூன்று வாரத் தாக்குதலை ஆரம்பித்தது.

இன்றைய தின பிறப்புகள்:

1571 – யோகான்னசு கெப்லர், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1630)

1773 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலேயப் பொறியியலாளர், அரசியல்வாதி (இ. 1857)

1797 – கலிப், இந்தியப் புலவர் (இ. 1869)

1822 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய வேதியியலாளர், நுண்ணுயிரியலாளர் (இ. 1895)

1895 – சர்தார் உஜ்ஜல் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 1983)

1901 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)

1913 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்டவர் (இ. 1965)

1945 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (இ. 2013)

1948 – செரார்டு தெபர்டியு, பிரான்சிய-உருசிய நடிகர்

1965 – சல்மான் கான், இந்திய நடிகர்

இன்றைய தின இறப்புகள்:

1834 – சார்லஸ் லாம், ஆங்கிலேயக் கட்டுரையாளர் (பி. 1775)

1914 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1863)

1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (பி. 1843)

1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1832)

1976 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1909)

1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானித்தானின் 2வது அரசுத்தலைவர் (பி. 1929)

2007 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (பி. 1953)

2016 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)

2018 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (பி. 1956)

Categories

Tech |