Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 League: பொல்லார்ட் அதிரடியில் சரிந்த டஸ்கர்ஸ்..!!

டி10 கிரிக்கெட் லீக்கின் 10ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது.

கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த பரிணாமமான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10-ஆவது லீக் ஆட்டத்தில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணி, ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர் அணியை எதிர்கொண்டது.

Image

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டஸ்கர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ்-எவின் லீவிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஆம்லாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Image

இதன்மூலம் டஸ்கர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 35 ரன்களையும் ஹாசிம் ஆம்லா 32 ரன்களையும் சேர்த்தனர். பின் இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்கான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் கேப்டன் வாட்சன் முதல் பந்திலும் தேவ்சிச் 5 ரன்களிலும் வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கிரன் பொல்லார்ட்-ராஜபக்ச இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 8.3 ஓவர்களிலேயே டெக்கான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது.

Categories

Tech |