ஐசிசி டிசம்பர் மாதத்திற்கு சிறந்த வீரர் பட்டியலில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் உள்ளிட்ட இடம்பிடித்துள்ளார் .
ஐசிசி மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளார்.இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் , இரண்டு அரை சதம் 276 ரன்கள் குவித்துள்ளார்.
இதையடுத்து நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் .எனவே இந்த 3 வீரர்களில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.