Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் இருந்து விலக முடிவு….. ஓய்வு அறிவித்த பிரபல நடிகர் அமீர் கான்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் லால் சிங் தத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது நல்ல கதை என்றாலும் சமூக வலைதளங்களில் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் தீயாக பரவியதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிப்படைந்தது. இந்த படத்தை நாடு முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினர். இந்த படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் என்ற திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து அமீர்கான் விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவல்களுக்கு தற்போது அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் ஒரு நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படம். ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. இப்படத்தில் வேறு ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் சாம்பியன் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து படத்தை நானும் தயாரிக்கிறேன். அதன் பிறகு நான் சினிமாவில் இருந்து அடுத்த வருடத்தில் இருந்து ஒன்றரை வருடங்களுக்கு ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.

இந்த நேரத்தில் என்னுடைய அம்மா, குழந்தைகள் மற்றும் உறவுகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். கடந்த 35 வருடங்களாக நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். இது என்னுடன் இருப்பவர்களுக்கு நியாயமாகாது என்பது எனக்கு தெரியும். எனவே அவர்களுக்காக நான் நேரத்தை ஒதுக்க விரும்புகிறேன். என்னுடன் இருப்பவர்களுக்காக நான் நேரத்தை செலவிட போவதால் சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார். மேலும் நடிகர் அமீர்கான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |