தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முழுக்கையாக மூடப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் இரு சுழற்சி முறைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு முறை சுழற்சியாக வகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.
பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டிட வசதிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பாதி பாட பிரிவுகள் காலை வகுப்பாகவும், மீத பாட பிரிவுகள் மதிய வகுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இவற்றை இணைத்து ஒரே சுழற்சி முறையில் காலை முதல் மதியம் வரை கல்லூரிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.