Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா அன்று கோவிலை இடிக்க முடிவு…. பொதுப்பணித்துறை திட்டவட்டம்…. கொந்தளிப்பில் பக்தர்கள்….!!

சேலத்தில் பூட்டு முனியப்பன் கோவிலை  இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி அருகே ஐயப்பன் திருமாளிகை பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பூட்டு முனியப்பன் கோவிலில்  எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி மனதில் வேண்டிக்கொண்டு கோவிலில் பூட்டு போட்டு சென்றால் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுதான் அந்த கோவிலின் பெயர் காரணம். சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை  சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூட்டு முனியப்பன் கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக கூறி கோவிலை அகற்ற கோரி ஜேசிபி இயந்திரங்களில் வந்தனர். அப்போது கோவிலை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என பக்தர்கள் கூறியதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஆண்டு தோறும் தை மாதத்தில் பூட்டு முனியப்பனுக்கு 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் விழா நடத்துவது வழக்கம்.

நடப்பாண்டில் பிப்ரவரி 4-ஆம் தேதி பூட்டு முனியப்பனுக்கு விழா நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை கோவிலில் ஓட்டிச் சென்றனர். அதில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கோவிலை இடித்து அகற்ற போவதாக குறிப்பிடப் பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |