Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக்கிய கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்த முடிவு…. பொதுமக்களுக்கு தடை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் மூடப்பட்டுள்ள கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வருகிற ஏப்ரல் 1ம் தேதி மற்றும் ஏப்ரல் 4ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகங்கள் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்களில் ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |