Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த முடிவு!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 100% சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்து நிறைந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் வர கூடாது என கவனம் செலுத்தப்படுகிறது.

இதன் எதிரொலியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்க்ளை 100% சோதனை செய்வதால் துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளது. சுங்கத்துறை சோதனையால் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் கண்டெய்னர்கள் தேக்கம் அடைந்துள்ளது.

சரக்கு விமானங்களில் வந்த பொருட்களை விடுவிப்பதிலும் சிக்கல் உள்ளதாக ஏஜெண்டுகள் புகார் அளித்துள்ளனர். இதுக்குறித்து தொழில் நிறுவனங்கள் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளனர். இதனால் இறக்குமதியான சீன பொருட்கள் மீதான 100% சோதனையை ஓரளவு தளர்த்த மத்திய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |