சேலம் மாவட்டத்தில் பூ மார்கெட் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கி வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி மார்க்கெட் அமைந்துள்ளது. அந்த பூ மார்க்கெட்டிற்கு சந்தனமல்லி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த பூ மார்கெட்டிற்கு தினமும் 30 டன்னுக்கும் மேல் பூக்களைக் கொண்டு வருவார்கள்.
இந்நிலையில் பூ மார்க்கெட்டில் சில வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் பூ மார்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களைக் விற்க முடியாமல் வருமானம் இன்றி மன வேதனை அடைந்துள்ளனர்.