புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடாங்கால் பூக்கள் விற்பனை சரிவடைந்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், அணவயல் மாங்காடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் விளையும் பூக்களை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திருமண நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவில்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பூக்கள் விற்பனை சரிவடைந்துள்ளதால் ஒவ்வொரு நாளும் சுமார் 3 டன் அளவிற்கு பூக்கள் தேக்கமடைந்து குப்பைகளுக்களில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.