கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் காவிரியாற்றில் நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகக் குறைந்து விட்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறைந்து விட்டது. இதனால் காவிரி ஆற்றில் பிலிக்குண்டுலுக்கு நீர்வரத்து இன்று காலை நொடிக்கு 13,000 கன அடியாகக் குறைந்து உள்ளது.
மேலும் மேட்டூர் அணைக்கான தண்ணீர் வரத்தும் நொடிக்கு 7,271 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாகவும், நீர்இருப்பு 63 புள்ளி 7 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காகக் காவிரி ஆற்றில் நொடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 500 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.