Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பு…. படக்குழுவினர் ஆச்சரியம்….!!!

பிரபல நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவரது திறமையான நடிப்புகென்று ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் புதிய படத்தில் தற்போது ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சி ஒன்றில் ஜெய் மேஜை உடைக்கும் காட்சி படமாக்கப்படும் போது அவரது தோள்பட்டை இடம் பெயர்ந்தது.

இதையடுத்து அவரை பரிசோதித்த பிசியோதெரபி குழுமம் ஓய்வெடுக்க சொன்னபோதும் அதை பொருட்படுத்தாமல் நடிகர் ஜெய் படக்குழுவினரின் நலன் கருதி மீதமுள்ள ஆபத்தான காட்சிகளையும் தானே நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.

ஏனென்றால் இந்த தேதிகளை தவற விட்டால் மீண்டும் படக்குழுவினரால் இதே இடத்தில் படப்பிடிப்பு நடத்தவதற்கு அனுமதி பெற முடியாது என்ற காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். நடிகர் விஜய்யின் இந்த அர்ப்பணிப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |