வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டருக்கு சூறாவளிக் காற்று வீசும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.