தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிடுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் கொண்ட அமா்வில் மே 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு என கூறிய நீதிபதிகள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ம் நிலை வாரிசுகளாக அறிவித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
தீபா, தீபக்கிற்கு 24 மணி நேர பாதுகாப்பும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2ம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.