Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் திபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் கொண்ட அமா்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு என கூறிய நீதிபதிகள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

மேலும் ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற பரிந்துரைகள் குறித்து 8 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தீபா, தீபக்கிற்கு 24 மணி நேர பாதுகாப்பும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |