Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெத் ஓவரில் “நோ பால்”…. தோனியை புகழ்ந்த தீபக் சாஹர்…..!!

டெத் ஓவரில் நோபால் வீசியது குறித்து கேப்டன் தோனியையும், அணியையும்  தீபக் சாஹர் பெருமையாக கூறியுள்ளார். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது  தீபக் சாஹர் வீசிய 2 ‘நோ பால்கள்’ மிக முக்கியமானது. முதலில் களமிறங்கி விளையாடிய சி.எஸ்.கே  160 ரன்கள்  குவித்தது. பின்னர் இலக்கை துரத்திய  பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள்  தேவைப்பட்டது. இதில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருந்தது.

19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தே ‘நோ பால்’. பந்து அவர் கையை விட்டு நழுவியது. அந்தப் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அதன் காரணமாக ,பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது . ப்ரீ ஹிட்டும்  கிடைத்தது. ஆனால், அடுத்த 2 வது பந்தையும்  ‘நோ’ பந்தாக தீபக் சாஹர் வீசினார். அந்தப் பந்திலும்2 ரன் அடிக்கப்பட்டது. மீண்டும் ஒரு ப்ரீ ஹிட். ஆக மொத்தம் பந்தே வீசப்படாமல் தீபக் சாஹர் 8 ரன்களை  வாரி இறைத்தார். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு  2 ஓவர்களில் 31 ரன் என்ற நிலை வந்தது . அதனால், சென்னை அணி வீரர்கள் மிகவும் டென்ஷன் ஆகிவிட்டனர். கேப்டன் தோனி டென்ஷன் ஆகி  நேராக தீபக் சாஹரிடம் வந்தார். கையை அவரிடம் நீட்டி சில நொடிகள் பேசி ஏதேதோ சில ஆலோசனைகளை வழங்கினார். அப்போது தீபக் சாஹர் மிகவும் நொந்து போய் பரிதாபமாக இருந்தார்.

அதன் பிறகு எப்படியோ, அடுத்த 6 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இது சென்னை அணியின் வெற்றிக்கு மிக உதவியாக இருந்தது. கேப்டன் தோனி, தீபக் சாஹரிடம் கையை நீட்டி பேசுவது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டது. இந்நிலையில், டைம் ஆப் இந்தியாவிற்கு தீபக் சாஹர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில்  நோ பால்’ வீசியது பற்றிய அனுபவம் குறித்து பேசிய போது  “போட்டி முடிவடைந்த  பின்னர், ஒவ்வொரு வீரரும் தன்னிடம்  வந்து வாழ்த்து தெரிவித்தனர். டெத் ஓவரில் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்ததாக கூறினர். கேப்டன் தோனியும் என்னிடம் வந்து என்னை பார்த்து சிரித்தார், என்னை கட்டிப்பிடித்து மிக சிறப்பாக பந்துவீசியதாக பாராட்டினார்.

நான் 2 பந்தினை மிக மோசமான டெலிவரி செய்துவிட்டேன், ஆனால், அதிலிருந்து உடனடியாக மீண்டுவிட்டேன். கேப்டன் தோனி என்னை உற்சாகப்படுத்தினார். என்னை சிறப்பாக பந்துவீசுமாறு வலியுறுத்தினார். எங்கள் அணியின் வெற்றிக்காக நான் பங்களிப்பு செலுத்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதலில் நான் மிக மெதுவாக பந்துவீச முயற்சிசெய்தேன் . ஆனால், பந்து என்னுடைய கையைவிட்டு நழுவி சென்று நோ பாலாக மாறியது . அந்தப் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. மீண்டும் அதேபோல், முயற்சி செய்ய மறுபடியும் அதே தான் நேர்ந்தது . உடனடியாக அந்த தவறை  திருத்திக்  கொண்டு பந்துவீசினேன். அந்தத் தவறை நான் திரும்பவும் செய்யவேயில்லை.

 

 

கடந்த ஐபிஎல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியில் நான் இடம் பெற்றிருந்ததை  நினைத்து மிகவும் பெருமை கொண்டேன். இந்த வருடம் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இந்த வருடமும்  கோப்பையை தக்க வைத்து கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. என்னால் முடிந்த அளவிற்கு சி.எஸ்.கே.வின் வெற்றிக்கு  பங்களிப்பை செலுத்துவேன். அதிக  விக்கெட் எடுக்க வேண்டும். டெத் ஓவரில் நான் மிக சிறப்பாக பந்து வீச வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |