Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்னைக்கு நடந்த அவமானம்…! பேட்டால் மிரட்டிய தீபக் ஹூடா… அதிரடிக்கு இப்படி ஒரு காரணமா ? வியக்கும் ரசிகர்கள் …!!

நேற்றைய போட்டியில் தீபக் ஹூடா,பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் ,என்று நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .

நேற்று  மும்பை  நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான்  – பஞ்சாப்  அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த  பஞ்சாப் அணியில் , கிறிஸ் கெயில்  ஆட்டமிழந்த பிறகு ,அடுத்து தீபக் ஹூடா களமிறங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நிகோலஸ் அடுத்து விளையாடுவர் என்று எதிர்பார்த்த போது ,தீபக் ஹூடா களமிறங்கினார். தொடக்க ஆட்டத்திலிருந்தே  தீபக் ஹூடா, தன்னுடைய வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் அடித்த பந்துகள் அனைத்தும் பவுண்டரிகளாகவும் ,சிக்ஸர்களாகவும் பறந்தன. கடைசியாக தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து  ,அரைசதமடித்து வெளியேறினார். 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் அடித்து விளாசினார்.  தீபக் ஹூடா வின்  இந்த அதிரடியான ஆட்டத்திற்கு நெட்டிசன்கள் மத்தியில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடந்து முடிந்த சையத்  முஷ்டாக் அலி  டி 20 தொடரில் தீபக் ஹூடா , பரோடா அணிக்காக விளையாடி உள்ளார். அந்த அணியின் கேப்டன் கருணால் பாண்டியாவை பற்றி தீபக் ஹூடா ,பரோடா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அணியின் கேப்டனான கருணால்  பாண்டியா ,தன்னை மற்ற வீரர்கள் முன் தரக்குறைவாக பேசுவதாகவும், மற்ற வீரர்கள் முன் தன்னை அவமானப்படுத்துவதாகவும் , கடிதத்தில் கூறியிருந்தார். அதை கண்டுகொள்ளாத பரோடா நிறுவனம் ,அவரின்   குற்றச்சாட்டை பற்றி விசாரிக்காமல் ,அந்த அணியில் இருந்து அவரை நீக்கியது. இதன் காரணமாகவே தீபக் ஹூடா, அவமானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்றைய  தீபக்கின்  ஆட்டம் வெறித்தனமாக காணப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். இனிவரும் மும்பைக்கு எதிரான போட்டிகளில், தீபக் ஹூடாவின் ,ஆட்டம் இன்னும் அதிரடியாக காணப்படும், என்று நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |