Categories
பல்சுவை

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் முறைகள்…..!!

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவார்கள். இல்லத்தின் மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் காலிலும் நலங்கு , மஞ்சள், சுண்ணாம்பும் கலந்த கலவையிட்டு மகிழ்வார்கள். பின் எண்ணெய் குளியல் , கங்கா குளியல் செய்வர்.நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் , பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வார்கள். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேகமாக பலர் புடவையும் குறிப்பாக பட்டுப்புடவைகள் , ஆண்கள் வேஷ்டியும் உடுத்தி இருப்பார்கள்.

தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து , ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி லேகியம் செரிமானத்திற்கு மிகவும் உகந்தது , அது அருந்துவது மரபு.தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும் , லட்சுமியும் , அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , பூமாதேவியும் , மகாவிஷ்ணுவும் வசிப்பதாக வசிப்பதாக கருதப்படுவதே ஆகும். அந்த நீராடலைத்தான் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர்.

அன்றைய தினம் நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர் நீர்நிலைகளும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்து பண்டிகையாக இருந்தாலும் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இலங்கையில் இந்தியா போன்ற பெருமளவு தீபங்கள் ஏற்று கிடைத்தது கிடையாது. இதனை விளக்கீடு என்று திருவிழா காலத்திலேயே செய்கின்றனர். மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்ற இந்து விழாக்கள் போல அல்லாமல் அனைத்து இந்துக்களும் ஏதோ ஒரு வழியில் தீபாவளியைக் கொண்டாடுவதாலும் ,  கிறிஸ்துமஸ் போன்று கொண்டாட காலங்களிலும் வருவதாலும் வட இந்திய இந்துக்களும் இப்பண்டிகையை அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஃபெஸ்டிவல் ஆஃப் லைப் என்று அறியப்படுகின்றது.

Categories

Tech |