Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ஜியோவின் புதிய ஸ்மார்ட் போன்கள்… Jio வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து மலிவான விலைக்கு ஸ்மார்ட் போனை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட் போனை மலிவு விலையில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டுள்ளனர். மேலும் இது தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்த முன்பதிவு காண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகையில் போது இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தால் சிறப்பானவர்த்தகத்தை பெற முடியம் என்று கவுன்டர்பாயின்ட் ரீசர்ச் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மதிப்பு ரூ.3600 -க்கும் குறைவாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜியோ புக் மற்றும் ஜியோ லேப்டாப் குறித்த தகவல்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |