குலாப்ஜாமூன்
தேவையான பொருட்கள் :
ரவா – 1 கப்
நெய் – 1/2 ஸ்பூன்
பால் – 2 1/2 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
தண்ணீர் – 2 1/4 கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன்
செய்முறை :
கடாயில் ரவா சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் .கடாயில் நெய் சேர்த்து அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து கொதிக்கவிட்டு ரவா சேர்த்து கெட்டிப்படாமல் கிளற வேண்டும் . ரவா வெந்ததும் இறக்கி நன்கு பிசைந்துக்கொள்ளவேண்டும் . கடாயில் 2 1/4 கப் தண்ணீர் சேர்த்து 1 1/2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பாகாக காய்ச்சி இறக்க வேண்டும் . பின் பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு ஊற விட்டு எடுத்தால் சுவையான குலாப்ஜாமூன் தயார் !!!