சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நாட்டை விட்டு பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள் மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தனது தெரிவித்துள்ளார். சுஷ்மா ஜி மறைந்த செய்தியால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the news of Sushma Ji's demise, may her soul rest in peace. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2019