புதுக்கோட்டை மாவட்டத்தில் அய்யனார் கோவிலில் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் அய்யனார் கோவிலில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த மானை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்தமான் இயற்கையாக இறந்ததா அல்லது யாரேனும் கொன்றார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.