புள்ளிமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி புள்ளிமானே சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.
இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானே பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் வனத்துறையினர் அந்த புள்ளிமானே அதை காட்டுப்பகுதியில் நல்லடக்கம் செய்துள்ளனர்.