டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் தாக்கப்பட்டனர். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி ஜேஎன்யு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.