Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசியும் போட்டுட்டேன்..! பிரிட்டன் அமைச்சருக்கு உறுதியான தொற்று… வெளியான பரபரப்பு டுவிட்..!!

பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை அன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து “இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டு விட்டேன். எனது பிசிஆர் முடிவுக்காக காத்திருக்கிறேன். தற்போது லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.” என்று சஜித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |