தூத்துக்குடி அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த பெரியசாமிபுர கிராமத்தை சேர்ந்தவர் பாக்கிய ஜார்ஜ். இவரும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் மகள் மேரி என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திருமணமான 5 மாதங்களில் பெண் தூக்கிட்டு இறந்ததால் மர்மம் இருப்பதாக எண்ணி கோவில்பட்டி சப் கலெக்டர் இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளார்.