சசிகலா தான் நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட போவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி பெங்களுருவில் தங்கி இருந்தார். இதையடுத்து இன்று பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் வந்துள்ள சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். செய்தியாளர்கல் சசிகலாவிடம் அதிமுக தலைமையிடம் செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக நான் தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்.
கழகம் எத்தனையோ முறை பல சோதனைகளை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித்தலைவி ஜெயலலிதா வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதே என்னுடைய விருப்பம். அத்துடன் அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று சசிகலா கூறியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.