Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த பெண்ணோடு நிச்சயம்…. அன்றைய தினமே இளைஞர் தற்கொலை…. பின்னணி என்ன…??

காதலித்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (24). இவர் கடந்த வருடம் காவலர் பயிற்சி பெற்று கோவையில் காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இதை அடுத்து இவர் உறவினர் பெண் ஒருவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணும் கோவையில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர்களின் காதல் விவரம் அறிந்த அந்த குடும்பத்தினர் அந்த பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் அன்றைய தினம் வீட்டைவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பூவரசன் வீட்டுக்கு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ஏலகிரி மலை பகுதியில் இரு சக்கர வாகனம் ஒன்று நிற்பதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல் நிலைத்தில் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர். இந்த விசாரணையில் இறந்தது பூவரசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மதுவில் விஷம் கலந்து குடித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடற்கூறாய்வுக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு காரணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Categories

Tech |