ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். ஆண்கள், சிறிய தாடியை வைத்திருக்கக் கூடாது என்று கூறினர். மேலும் பெண்களை, பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 2000-ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று பெற்ற பட்டம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பில், தலிபான்களின் கல்வி அமைச்சரான அப்துல் பாகி ஹக்கானி, பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தற்போது இருக்கும் முதுகலை படிப்புகள் அனைத்தும், மதரசாவில் கற்கும் மத அடிப்படையிலான கல்வியை விட மதிப்பு குறைந்தது தான். எனவே, கடந்த 20 வருடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் வாங்கிய பட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று கூறியுள்ளார்.