Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்டம் இல்லாம இருந்துச்சு…! இப்போ OK ஆகி இருக்கும்…. 10ஆம் தேதி முதல் மீண்டும் தேஜஸ் ரயில் சேவை …!!

ரயில்வே துறையால் நிறுத்தப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் வருகின்ற பத்தாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரயிலில் 992 இருக்கைகள் இருந்த போதிலும் குறைந்தளவு பயனிகளுடனே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது, தேஜஸ் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தினமும் 200 பேருக்கு குறைவாகவே இதில் பயணம் செய்தனர். இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்த ரயிலானது கடந்த 2ஆம் தேதி முதல் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து தேஜஸ் சிறப்பு ரயிலானது வருகின்ற 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் வழக்கம்போல வியாழக்கிழமை தவிர பிற 6 நாட்கள் இயக்கப்படும் எனவும், கொடைக்கானல் ரோடு, திருச்சி ஆகிய நிலையங்களில் மட்டுமே தேஜஸ் ரயில் நின்று செல்லும் எனவும் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 12:15 மணிக்கு சென்றடைந்து, அதன் பின் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு இரவு 9:15 மணிக்கு வந்து சேரும் எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |