ஜனவரி 4ஆம் தேதி முதல் சென்னை மதுரை இடையே செயல்படும் தேஜஸ் ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
சென்னையிலிருந்து மதுரைக்கு இடையே இயங்கும் விரைவு சிறப்பு ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பயணிகளிடம் இருந்து போதிய ஆதரவு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இல்லை. இதன் காரணமாக ஜனவரி 4ஆம் தேதி முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் முடக்க படுவதாகரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்த ரயில் திருச்சி மற்றும் கொடைக்கானல் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நிற்கும். இந்த எக்ஸ்பிரஸின் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் விலை 1295 ரூபாய். மக்களின் வரவேற்பை பெறாத எக்பிரஸ் முடக்கப்பட்டுள்ளது.