Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “பயணங்களால் மகிழ்ச்சி”… ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம்…..!!

கும்ப ராசி அன்பர்களே….!!! இன்று உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.

இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்றையநாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும். குடும்பத்தில் கூட நல்ல ஒற்றுமை இருக்கும். இன்று மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் இருந்த தொந்தரவுகள் விலகிச்செல்லும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதே போல கல்வியில் நல்ல ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும்  7

அதிர்ஷ்ட நிறம் :  நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |