Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் விண்வெளி வீரர்கள்… நாசாவின் பரபரப்பு தகவல்..!!

ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் மோசமான வானிலை காரணமாக பூமிக்கு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் வீரர் ஒருவர், நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ஆய்வு பணிக்காக ஸ்பேஸ்-எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்ணிற்கு சென்றிருந்தனர். இதையடுத்து விண்ணுக்குச் சென்று க்ரூ-2 எனப்படும் விண்வெளி ஆய்வு திட்டத்தின் பணியை பூர்த்தி செய்த அந்த விண்வெளி வீரர்கள் மோசமான வானிலை காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச ஆய்வு மையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு புறப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த க்ரூ-3 திட்டம் நவம்பர் 10-ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |