Categories
மாநில செய்திகள்

ஃபேமிலி மேன் 2 தொடரை நீக்குங்கள்… அமேசானுக்கு சீமான் எச்சரிக்கை…!!!

ஃபேமிலி மேன் 2 இணைய தொடரை நீக்க வேண்டுமென்று அமேசான் நிறுவனத்திற்கு நாம்தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள தொடர் தி பேமிலி மேன் 2. இந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இந்த தொடரை ராஜ் மட்டும் டீகே இயக்கியுள்ளனர். இதன் முதல் பாகத்திற்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது இரண்டாவது பாகம் வெளியானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இலங்கை பெண்ணாக நடித்துள்ள சமந்தா, மனித வெடிகுண்டாக நடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டதாகும் கூறப்படுகின்றது. இதனால் இந்த தொடரை அமேசான் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். அப்படி நீக்கவில்லை என்றால் அமேசான் சேவைகள் அனைத்தையும் எதிர்த்து பிரச்சாரம் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |