Categories
டெக்னாலஜி

டெலிட் செய்த புகைப்படங்களை…. திரும்ப பெறலாம்… இன்ஸ்டாகிராம் அறிமுகம்…!!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது அதன் பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. டெலிட் செய்த புகைப்படங்களுக்காக புதிய பகுதி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், சமீபத்தில் டெலிட் செய்த புகைப்படங்களை அதில் சென்று பார்க்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. அதேபோல “Unsend” மெசேஜ் குறித்து உடனடியாக தகவல்கள் தெரிவிக்க வசதிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |