பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கட்சிக்கு என்ன கலங்கம் பண்ணுன்னு தெரியல. நான் கொலையை பண்ணுனேனா ? இல்ல கரன்ஷன் பண்ணி நாலு பேரு வயித்துல அடிச்சனா ? இல்லன்னா திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணல. நான் கட்சிக்காக உழைச்சிட்டு இருக்கேன். இதில் எங்கே நான் கலங்கம் செஞ்சேன்.
செல்வகுமார் என்று ஒரு தனிப்பட்ட நபர் மூலம் எனக்கு தாக்குதல் வரும்போது அவங்களுக்கு திருப்பி பதிலடி கொடுத்தேன். அதுக்கு என் மீது கட்சி நடவடிக்கை எடுத்து நியாயம் கிடையாது. யாராயிருந்தாலும் சரி, என்னை யாராவது தாக்குனா ? நான் திருப்பி தாக்குவேன். ஒரு நிர்வாகியை கொச்சைப்படுத்துற அளவுக்கு கமெண்ட் வரும் போது, அதுக்கு லைக் போட்டு, அவர் சந்தோஷப்பட்டு இருக்காருன்னா… அதுக்கு நான் பதிலடி கொடுப்பேன்.
பாஜகவுக்கு எட்டு வருஷம் நல்லா ஸ்ட்ராங்காவே வேலை செஞ்சுட்டு இருக்கோம். அதுக்கான அங்கீகாரம் கொடுத்துட்டு இருக்காங்க. ஃபர்ஸ்ட் நான் நேஷனல் யூத் பிரிவில் பொறுப்பில் இருந்துள்ளேன். இப்போது வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருக்கேன்.
அப்படி பார்க்கும்போது பாஜகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு தான் இருக்காங்க. ஆனா இன்னொரு பாஜக நிர்வாகிகளே, நம்மள தாக்குறாங்கன்னு சொல்லும்போது, அவங்கள கூப்பிட்டு கண்டிக்காம.. என்ன வந்து நீக்குவது அதிர்ச்சியாக இருக்கு என தெரிவித்தார்.