டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பின்பு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக சூரியனின் வெப்ப நிலை தாக்கம் சித்திரை மாதத்தில் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி மாதத்தின் முதலில் இருந்தே வெயில் சுட்டெரிக்கிறது. சாலையில், வீடுகளில், வேலை செய்யுமிடங்களில் எங்கு பார்த்தாலும் அனல் காற்று வீசுகின்றது.
அதன்பின் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த நிலையில் கடுமையான வெப்பம் இன்று டெல்லியில் நிலவியதாக இந்திய வானிலை மையம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இன்று வெப்பநிலை செல்சியஸ் அதிகபட்சமாக 40.1 என்ற டிகிரியில் பதிவாகியுள்ளது. 76 வருடங்களுக்கு பின்பு மீண்டும் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.