டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மதம் மாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால்கவுதம் கலந்து கொண்டதற்காக பாஜக விடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கௌதமை பதவி நீக்கம் செய்யுமாறு கெஜரிவாலிடம் பாஜகவினர் கோரினர். மேலும் வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் திரங்கா பேரணிக்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்தனர்.
இந்நிலையில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால்கவுதம் இன்று தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, இன்று மகரிஷி வால்மீகி ஜியின் வெளிப்பாடு நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படி ஒரு நாளில் தற்செயலாக இன்று நான் பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். இன்று நான் மீண்டும் பிறந்துள்ளன். இப்போது நான் இன்னும் உறுதியாக சமூகத்தின் மீதான உரிமைக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக அந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.