டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்டியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளராக அன்ரிச் நோர்டியா இடம்பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறுவதற்காக கடந்த 6ம் தேதி மும்பைக்கு வந்துள்ளார். ஐபிஎல் விதிமுறையின்படி, ஏழு நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டார். இதன்பின் தனிமைப்படுத்துதல் முடிந்து ,அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானதால், அடுத்து வரும் போட்டியில் ,டெல்லி அணியில் பங்குபெற மாட்டார். ஐபிஎல் விதிமுறையின்படி தொற்று ஏற்பட்ட வீரர்கள் ,10 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில், தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். எனவே அன்ரிச் நோர்டியாவும் விதிமுறையின்படி, மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதற்கு முன்பாக டெல்லி அணியின் மற்றொரு, பவுலரான அக்ஷர் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.