நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானது. டெல்லிக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. முடிவுகள் 11ஆம் தேதி வெளியாகின்றன.