டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சிலம்புரில் 4 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென கண் இமைக்கும் நொடியில் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்கள் ஹீனா என்ற ஒரு பெண் உட்பட இருவரை சடலமாக மீட்கப்பட்டார். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.