ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது
ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். சாம்சன் ஒரு பந்தும் எதிர் கொள்ளாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்தும், ரஹானேவும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் 50 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் 8, டர்னர் 0, ஸ்டூவர்ட் பின்னி 19, ரியான் பராக் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆடிய ரஹானே 63 பந்துகள் 105* ரன்கள் (3 சிக்ஸர்,11 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, அக்சர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதயடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவனும், பிருத்வி ஷாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். அதன்பிறகு அதிரடியாக விளையாடிய ஷிகர் தவன் 54 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ரிஷப் பண்ட்அதிரடியாக விளையாடினார். அவருக்கு பிருத்விஷா கம்பேனி கொடுத்தார். அதன் பின் பிருத்விஷா 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரூதர்ஃபோர்ட் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பிறகு ரிஷப் பண்ட் சிக்ஸர் மூலம் அணிக்கு வெற்றியை வசமாக்கினார். இறுதியில் டெல்லி அணி 19.2 ஓவரில் 4விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 78* (36) ரன்களிலும், இங்ரம் 3, ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கலத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுகளும், தவல் குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.