சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 46 (26), டோனி 32 ரெய்னா 30 (16) , ரன்கள் குவித்தனர்.
இந்நிலையில் தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது என்றும், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். மேலும் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனால் இதற்காக நான் பேட்டிங்கை குறை கூற மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.