Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வரை கடுமையாக சாடிய… கௌதம் காம்பீர்…!!

டெல்லி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய வசதி கிடைக்கவில்லை என்று முதல்வர் கெஜ்ரிவாலின் செயல்பாட்டை கௌதம் காம்பீர் எம்பி டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகளவு பாதித்த மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாட்டை கௌதம் காம்பீர் எம்பி ட்விட்டரில் விமர்சித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:” ஆக்சிஜன் ஆலைகள் இல்லை, அதை எடுத்து செல்லும் டேங்கர் இல்லை, ஆக்சிஜன் ஒதுக்கீடு பற்றிய திட்டமில்லை, ஆக்சிஜன் தணிக்கை சுத்தமாக இல்லை, மொத்தத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் விளம்பர செலவுக்காக டெல்லி மக்கள் தங்கள் அன்புக்குரிய அவர்களின் உயிர்களை பறிகொடுத்து வருகின்றனர் என்று கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Categories

Tech |