மும்பை அணியின் அபாயகரமான வீரர் இவர்தான் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்..
இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஐபிஎல் குறித்த கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வருகின்றனர்..
அந்த வகையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அபாயகரமான வீரர் யார் என்பது பற்றி கூறியுள்ளார்.. இதுபற்றி அவர் பேசுகையில், மும்பை அணியில் ரோகித் சர்மாவை விட அபாயகரமான வீரர் யாருமே இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.. மேலும் ரோகித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவியுள்ளார்.. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் ரோகித் சர்மா 4 முறை கேப்டனாக இருந்து கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்..
ரோஹித் சர்மா 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய சமயம் அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.. அதன் பிறகு 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ரோகித் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்..
ஹிட்மேன் 188 போட்டிகளில் விளையாடி 4,898 ரன்களை விளாசியுள்ளார்.. இதில் 36 அரை சதங்களும் அடங்கும்.. அதே நேரத்தில் 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும்போது மும்பை அணி விளையாடிய 5 போட்டியிலும் தோற்று மண்ணை கவ்வியுள்ளது. இந்த முறை தொடர் முழுவதுமே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.