டெல்லியில் கலவரத்தின்போது கலவரக்காரர்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கலவரக்காரர்களால் அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது. ஆங்காங்கே பொருட்களை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியும், போராட்டக்காரர்களை அடித்து துன்புறுத்தியும் வந்தனர்.
அந்த வகையில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஷபானா பர்வீன் என்ற கர்ப்பிணிப் பெண்ணை கலவரக்காரர்களில் ஒருவர் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் அவருக்கு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. நல்லவேளையாக அந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.