Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா.  அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் புதிதாக 20 பேர்  கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. இதில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 330 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |