Categories
தேசிய செய்திகள்

டெல்லி கொடூர கொலை….. “தலையை மட்டும் காணோம்”….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ர்த்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லியில் தங்கி இருந்தனர். மும்பையில் உள்ள பெற்றோருடன் ஷ்ரத்தார் பேசி வந்தார். ஆனால் கடந்த மே மாதத்திலிருந்து ஷ்ரத்தாவே அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து தந்தை டெல்லிக்கு வந்து ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற போது பூட்டி கிடந்தது. அதனை தொடர்ந்து அருகில் உள்ள போலீசில் புகார் அளித்தார்‌.

அந்த புகாரின் படி போலீசார் ஷ்ரத்தாவின் காதலன் அப்தாப்பை பிடித்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.அதாவது கடந்த மே மாதம் 18ஆம் தேதி ஷ்ரத்தா திருமணம் செய்யுமாறு தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரத்தில் அவரின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். அவற்றை பாலிதீன் பையில் எடுத்துச் சென்று அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீசி உள்ளார். இந்நிலையில் ஷ்ரத்தாவின்‌ உடல் பாகங்களை போலீசார் ஒவ்வொரு பகுதியாக தேடி கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால் அவரின்‌ தலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

Categories

Tech |