Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து… பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு…!!!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவருடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு, அர்விந்த் கெஜ்ரிவால் நன்றி கூறும் வகையில் பிட்டர் பதிவு செய்துள்ளார். மேலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பல்வேறு தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |