Categories
தேசிய செய்திகள்

3 நாள்… பிஸ்கட் மட்டும் தான்… பசியில் வாடிய இளைஞருக்கு…. சோறு போட்ட டெல்லி போலீஸ்…!!

டெல்லியில் பசியில் வாடிய இளைஞர்களுக்கு காவல்துறை உதவிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினக் கூலிகள், ரோட்டோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காவல்துறையினருக்கு போன் செய்து உதவி கேட்டது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் பிரசாத் மற்றும் அவரது நண்பர். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதும், இவர்கள் பணிபுரிந்த  நிறுவனமும் தற்காலிகமாக செயல்படாமல் இருந்தது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு உணவு வாங்க கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் மூன்று நாட்களாக பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பசியும், தாகமும் அதிகமான நிலையில் டெல்லி காவல் நிலையத்திற்கு போன் செய்து உணவு வழங்குமாறு உதவி கேட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் வழங்கிய பேட்டி ஒன்றில், பிரசாத் என்பவர் திடீரென்று போன் செய்து, மூன்று நாள்கள் கடும் பசியில் இருப்பதாகவும், உதவி தேவை என்றும் கேட்டனர்.

இந்நிலையில் சில காவலர்களை அனுப்பி அவர்களுக்கு உணவு  வாங்கிக் கொடுத்ததோடு சூழலை சமாளிக்க ரூபாய் 1000 பணமும், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பசியில் திருட்டு போன்ற வேலைகளில் இறங்காமல் காவல்துறையினருக்கு இந்த இளைஞர்கள் கால் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார். 

Categories

Tech |